ஓட்டு போட சைக்கிளில் வந்துள்ளார் நடிகர் விஜய்.

Thalapathy Vijay in Cycling Photos : தமிழகத்தில் இன்று சட்டமன்ற தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 7 மணி வரை நடைபெற உள்ளது.

சாதாரண மக்களைப் போலவே திரையுலக பிரபலங்கள் பலரும் ஆர்வத்துடன் ஓட்டளித்து வருகின்றனர். அஜித், விஜய், சூர்யா, ரஜினி, கமல் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் காலையிலேயே தங்களது ஓட்டுகளை பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் நடிகர் விஜய் ஜனநாயக கடமையான ஓட்டை பதிவு செய்ய சைக்கிளில் வந்துள்ளார். பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் எதிர்க்கும் வகையில் அவர் இவ்வாறு செய்வதாக கூறி சமூக வலைதளங்களில் அந்த புகைப்படம் தீயாக பரவி வருகிறது.