Thalapathy Fans Mass Celebration at Rohini Theatre

Rohini Theatre-ஐ அதிர வைத்த ரசிகர்கள் - Vera Level Celebration | Master FDFS | Chennai | Thalapathy

Rahman As Villian in Ponniyin Selvan : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மணிரத்தினம். இவரது இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் தான் பொன்னியின் செல்வன்.

இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் தொடங்கியது. சில நாட்கள் நடைபெற்ற படப்பிடிப்பு அதன் பிறகு கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த ஜனவரி 6ஆம் தேதி முதல் மீண்டும் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்புகள் தொடங்கியுள்ளனர். ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் கிட்டத்தட்ட பாதி இடத்தை பொன்னியின் செல்வன் படக்குழுவே ஆக்கிரமித்துள்ளது.

மொத்தம் ஐந்து பிரமாண்ட செட்டுகள் அமைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. முதலில் சோழர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. கார்த்தி திரிஷா ஐஸ்வர்யாரய் சரத்குமார் உள்ளிட்டோர் இந்த படப்பிடிப்பில் பங்கேற்று வருகின்றனர்.

இவர்களைத் தொடர்ந்து தற்போது ரகுமான் இந்த படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இவர் இப்படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.