தளபதி விஜய்க்கு ஒரு கோடிக்கு மேல் சம்பளம் கொடுத்து பேன் இந்தியா திரைப்படமாக வெளியிடுவதாக கூறி விஜயிடம் கால்சீட் கேட்டுள்ளார் பிரபல தயாரிப்பாளர் ஒருவர்.

Thalapathy 67 Movie Secrets : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் உருவாக உள்ள தளபதி 65 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கவுள்ளார்.

இந்த படத்தினை தொடர்ந்து விஜய் மீண்டும் மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 66 படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

தளபதி விஜய்க்கு கடந்த சில ஆண்டுகளாக தெலுங்குவிலும் மார்க்கெட் கணிசமாக உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால் தெலுங்கு திரையுலகில் கொடி கட்டிப் பறந்து வரும் தில் ராஜூ விஜயை வைத்து பிரம்மாண்ட படம் ஒன்றை தயாரிக்க முயற்சி செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய்க்கு ரூபாய் 100 கோடிக்கு மேல் சம்பளம் கொடுக்க தயாராக இருப்பதாகவும் கேஜிஎப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் அவர்களிடம் கதை ஒன்றை எழுதி சொல்லியும் உள்ளதாகவும் இதனை பேன் இந்தியா திரைப்படமாக வெளியிட தில் ராஜூ தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் அவர் விஜய்யிடம் கால்ஷூட் கேட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.