Thalapathy 66 With Gautam Menon

தளபதி விஜயுடன் இணைந்து படம் இயக்கப்போவதாக கூறியுள்ளார் கௌதம் வாசுதேவ் மேனன்.

Thalapathy 66 With Gautam Menon : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இதனைத் தொடர்ந்து நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடிக்க உள்ளார். இவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கப் போவதாகவும் தகவல் வெளியானது.

இப்படியான நிலையில் தளபதி 66 படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் முன்னணி நடிகர்களை வைத்து வெற்றிப்படங்களை தந்தவர் கௌதம் வாசுதேவ் மேனன். தற்போது தளபதி விஜயுடன் இணைந்து இயக்க உள்ளார்.

ஏற்கனவே கௌதம் மேனன் படத்தில் விஜய் நடிக்க இருந்து சூழ்நிலை காரணமாக மிஸ் ஆனதால், தற்போது அந்த வாய்ப்பை பயன்படுத்தி பக்காவான கதை ஒன்றை எழுதி வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.

தளபதி 66 திரைப்படம் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியாக வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது.