Thalapathy 66 Producer Details
Thalapathy 66 Producer Details

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தன்னுடைய 66வது படத்தின் தயாரிப்பாளரை தேர்ந்தெடுத்துள்ளார்.

Thalapathy 66 Producer Details : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியல் எப்போதும் அமோக வரவேற்பு உண்டு.

அட்லி இயக்கத்தில் இவர் நடித்த இருந்த பிகில் படத்தை தொடர்ந்து தற்போது கைதி, மாநகரம் ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

வெற்றி மாறனின் உதவி இயக்குனரின் இயக்கத்தில் நடிக்கப் போகும் ஜிவி பிரகாஷ் – வில்லனாக நடிக்கப் போவது யார் தெரியுமா?

விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், சாந்தனு, சேத்தன், சஞ்சீவ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா என பலர் இணைந்து நடித்துள்ள இந்தப் படத்தை விஜய்யின் உறவினரான பிரிட்டோ என்பவரும் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் உரிமையாளர் லலித் குமார் என்பவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.

இந்தப் படத்தின் விநியோகஸ்தர் உரிமையையும் லலித் குமார் தான் பெற்றுள்ளார். ஏப்ரல் 9ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்திய அரசு அறிவித்த லாக் டவுன் காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிப் போனது.

இதனால் படத்தின் தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான லலித் குமார் கடன் சுமையில் சிக்கி தவித்து வருகிறார்.

இதன் காரணமாக தளபதி விஜய் தன்னுடைய 66வது படத்தை மீண்டும் லலித் குமார் அவர்களுக்கு கொடுப்பதாக முடிவு எடுத்துள்ளார்.

வெற்றி மாறனின் உதவி இயக்குனரின் இயக்கத்தில் நடிக்கப் போகும் ஜிவி பிரகாஷ் – வில்லனாக நடிக்கப் போவது யார் தெரியுமா?

மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து இவர் ஏ. ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் நடந்து முடிந்த பிறகு அடுத்த படத்தின் படப்பிடிப்புகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குனர் யார் இந்த படத்தில் நடிக்கப் போவது யார் என்பது இன்னும் கொஞ்சம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.