Thalapathy 66 Movie Production

தளபதி 66 படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

Thalapathy 66 Movie Production : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் மாபெரும் வெற்றியைப் பெற்றது. இந்த திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். அனிருத் இசையமைத்திருந்தார்.‌

இத்திரைப்படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் உருவாக உள்ள தளபதி 65 படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. அனிருத் இசையமைக்க உள்ளார்.

இதனைத் தொடர்ந்து விஜய் அடுத்ததாக தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் பரவி வருகிறது. ஆனால் தற்போது கிடைத்துள்ள தகவலின்படி தளபதி 66 திரைப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவில்லை. மாஸ்டர் படத்தை தயாரித்து இருந்த செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தான் தயாரிக்க இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.