Thalapathy 66 Movie Details

தளபதி 66 படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பு நிறுவனம் குறித்த தகவல் கிடைத்துள்ளது.

Thalapathy 66 Movie Details : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக தளபதி 65 திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்த படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்கவுள்ளார். மேலும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்க அனிருத் இசையமைக்கவுள்ளார்.

இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய் யாருடைய இயக்கத்தில் யாருடைய தயாரிப்பில் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வந்தது.

தற்போது கிடைத்துள்ள தகவலின்படி தளபதி 66 திரைப் படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க லோகேஷ் கனகராஜ், அட்லீ, வினோத், அஜய் ஞானமுத்து ஆகியோரில் ஒருவர் இயக்கலாம் என கூறப்படுகிறது.

இது குறித்த தகவலால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.

https://twitter.com/TheVIJAY66Film/status/1359860147204415489?s=19