Thalapathy 66

தளபதி 66 படத்தின் இயக்குனர் யார் என்பது குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Thalapathy 66 Director Update : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் இறுதியாக மாஸ்டர் என்ற திரைப்படம் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது.

மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து என் செந்தில் குமார் இயக்கத்தில் உருவாக உள்ள தளபதி 65 என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்திற்கு பிறகு மீண்டும் அட்லி இயக்கத்தில் தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள படத்தில் விஜய் நடிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.