Thalapathy 66 Director Update

தளபதி 66 படத்தை இயக்க போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Thalapathy 66 Director Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் மாஸ்டர் என்ற திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்தை தொடர்ந்து விஜய் தளபதி 66 படத்தை இயக்குனர் அட்லி இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

இது குறித்து தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது விஜய் அடுத்ததாக மீண்டும் புதுமுக இயக்குனர் இயக்கத்தில் தான் நடிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

இதன் மூலம் தளபதி 66 பட இயக்குனர் அட்லி தான் என்ற வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.