Thalapathy 66 Details
Thalapathy 66 Details

வெற்றிமாறனுடன் வேற லெவலில் களமிறங்கி மாஸ் காட்ட உள்ளார் தளபதி விஜய்.

Thalapathy 66 Details : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற திரைப்படம் உருவாகியுள்ளது.

இந்த படத்தை தொடங்கி தளபதி விஜய் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள தளபதி 65 என்ற படத்தில் நடிக்க உள்ளார்.

அதன் பின்னர் வெற்றிமாறனுடன் கூட்டணி அமைப்பார் என கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

சினிமா பின்புலம் இல்லாமல் திரையுலகில் சாதித்துக் காட்டிய முக்கிய தமிழ் ஹீரோக்கள் – இதுல யாரு உங்க ஃபேவரட்?

இந்த நிலையில் தற்போது தளபதி விஜய் இந்த படத்திற்காக கிட்டத்தட்ட 150 நாட்கள் கால்ஷீட் ஒதுக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். தளபதி 65 படத்தை தொடர்ந்து இந்த படம் உருவாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

வெற்றிமாறன் தற்போது சூரியை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார். அதன் பின்னர் சூர்யா நடிப்பில் உருவாகவுள்ள வாடிவாசல் என்ற படத்தை இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.