Thalapathy 65 Story Line

சிம்பு நடிக்க இருந்த வேட்டை மன்னன் படத்தின் கதை தான் தளபதி 65 என தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Thalapathy 65 Story Line : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக மாஸ்டர் என்று திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தில் தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் உருவாக உள்ள தளபதி 65 படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கவுள்ளார். படத்தின் படப்பிடிப்புகள் மார்ச் மாதம் தொடங்கி படத்தை 2021 டிசம்பரில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

சமீபத்தில் இந்த படம் சிம்பு நெல்சன் கூட்டணியில் உருவாகி இருந்து கைவிடப்பட்ட வேட்டை மன்னன் படத்தின் கதைதான் என கூறப்பட்டு வந்தது.

இந்த நிலையில் தற்போது சிம்பு வேட்டை மன்னன் படம் குறித்து அளித்த பேட்டி வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் இது காமெடி கலந்த கேங்ஸ்டர் திரைப்படம் என தெரிவித்துள்ளார்.

தளபதி 65 திரைப்படமும் காமெடி கலந்த திரைப்படம்தான் என கூறப்பட்டு வந்த நிலையில் இந்தப் படத்தின் கதையாக இது இருக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.