Thalapathy 65 Shooting Update

தளபதி 65 படத்தின் ஷூட்டிங் எங்கே நடக்கும்? எப்போது தொடங்கும் என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

Thalapathy 65 Shooting Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக தளபதி 65 என்ற திரைப்படம் உருவாக உள்ளது.

இறுதியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படம் மாபெரும் வசூல் சாதனையை படைத்துள்ளது. இதனை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

அனிருத் இசையமைக்க உள்ள இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கும் என கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு எங்கே எப்போது தொடங்கும் என தகவல் கிடைத்துள்ளது. தேர்தல் முடிந்த கையோடு இப்படத்தின் படப்பிடிப்புகள் பூந்தமல்லியில் உள்ள கோகுலம் ஸ்டுடியோஸில் தொடங்கும் என தகவல் கிடைத்துள்ளது

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.