Thalapathy 65 Shooting Spot Location

தளபதி 65 படம் பற்றிய சூப்பர் தகவலை புகைப்படம் ஒன்றின் மூலமாக தெரிவித்துள்ளார் இயக்குனர் நெல்சன் திலிப்குமார்.

Thalapathy 65 Shooting Spot Location : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். மாஸ்டர் திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றதை அடுத்து சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள தளபதி 65 படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்தை நெல்சன் திலிப் குமார் இயக்க அனிருத் இசையமைக்க உள்ளார். வெகு விரைவில் படத்தின் படப்பிடிப்புகள் தொடங்க உள்ளன.

இப்படியான நிலையில் தற்போது இயக்குனர் நெல்சன் இந்த படத்திற்கான லொகேஷனை தேர்ந்தெடுக்கும் வேலையில் இறங்கியுள்ளார்.

ரஷ்யாவில் இருந்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டு தளபதி 65 சர்வதேச இடங்களில் படப்பிடிப்புகள் நடக்கும் என மறைமுகமாக தெரிவித்துள்ளார்.

இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.