Thalapathy 65 Release Plan

தளபதி 65 படத்தின் சூட்டிங் எப்போது தொடங்குகிறது? படம் எப்போது ரிலீஸ்? என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

Thalapathy 65 Release Plan : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக மாஸ்டர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் ஆகிய படங்களை இயக்கிய உள்ள நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த படத்தின் டைட்டிலை படக்குழுவினர் வரும் புத்தாண்டு அன்று அறிவிக்க முடிவு செய்துள்ளனர்.

மேலும் இப்படத்தின் படப்பிடிப்பை மார்ச் மாதம் தொடங்கவும் மூன்று கட்டமாக படப்பிடிப்புகளை நடத்தி 2021 ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியிட முடிவு செய்துள்ளனர்.

ஏற்கனவே பொங்கலுக்கு மாஸ்டர் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் தீபாவளிக்கு தளபதி 65 படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதால் ஒரே வருடத்தில் விஜய்யின் இரண்டு படங்கள் ரிலீசாக உள்ளன. இதனால் விஜய் ரசிகர்கள் 2021 டபுள் டமாக்கா ட்ரீட் உள்ளது என்பதில் சந்தேகமில்லை.