Thalapathy 65 Release Plan Update

ரஜினியின் அண்ணாத்த திரைப்படத்திற்கு முன்பாகவே தளபதி 65 திரைப்படம் வெளியாகப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Thalapathy 65 Release Plan Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனைத் தொடர்ந்து தளபதி 65 இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.

இந்தப் படம் இந்த வருடத்திலேயே வெளியாக வேண்டும் என்று தளபதி விஜய் இயக்குனரிடம் தெரிவித்து இருந்தார்.தீபாவளி அன்று இந்தப் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகவிருக்கும் திரைப்படம் அண்ணாத்த..இந்தத் திரைப்படம் தீபாவளி அன்று வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

இதனால் தளபதி ரசிகர்கள் பெரும் அப்செட்டில் இருந்தனர். ஆனால் தளபதி 65 ஆயுதபூஜைக்கு வெளியிட படக்குழு முயற்சித்து வருகிறது.

மேலும் தளபதி 65-ன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தளபதி பிறந்த நாளான ஜூன் 22ஆம் தேதி வெளியிடப் போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இது தளபதி ரசிகர்கள் இடையே பெரும் உற்சாகத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.