Thalapathy 65 Production Details

தளபதி 65 படத்தின் இயக்குனர் மட்டும் மாற்றமில்லை தயாரிப்பு நிறுவனம் மாற்றப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Thalapathy 65 Production Details : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.

இந்த படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் உருவாக உள்ள தளபதி 65 படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்த கூட்டணி உறுதியாகி படத்தில் முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ளன.

ஆனால் கடந்த வாரத்தில் இப்படத்திலிருந்து முருகதாஸ் விலக்கப்பட்டதாக தகவல் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

முருகதாசுக்கு பதிலாக இத்திரைப்படத்தை மகிழ்திருமேனி அல்லது பேரரசு இயக்கலாம் என பேசப்பட்டு வந்தது. தயாரிப்பு நிறுவனம் சன் பிக்சர்ஸ் தான் என கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது அதுவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதாவது தளபதி 65 படத்தை மிகவும் ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அடுத்ததாக விஜய் நடிப்பில் உருவாகியுள்ள தளபதி 66 திரைப்படத்தை தான் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க முடிவு எடுத்திருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.