Thalapathy 65 photoshoot at Sun TV Studio

போட்டோ ஷூட் உடன் முதல் கட்ட பணியை தொடங்கிய தளபதி 65.

Thalapathy 65 photoshoot at Sun TV Studio : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் நெல்சன் டிலிப்குமர் இயக்கத்தில் உருவாக இருக்கும் படம் தளபதி 65.

இந்தப்படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளதாக தகவல் வெளியான நிலையில் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது தொடங்கி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் ஸ்டூடியோவில் நடைபெற்ற போட்டோஷுட்டில் விஜய் உட்பட ஒரு சிலர்கள் கலந்துகொண்டு புகைப்படங்கள் வெளியிட்டுள்ளனர்.

இவர்கள் சன் நிறுவனத்தின் ஊழியர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.