Thalapathy 65 Movie Title

தளபதி 65 படத்தின் டைட்டில் என்ன என்பது பற்றி தெரிய வந்துள்ளது.

Thalapathy 65 Movie Title : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் இறுதியாக மாஸ்டர் என்ற திரைப்படம் வெளியானது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படம் ரூபாய் 300 கோடிக்கு மேல் வசூல் செய்தது.

இப்படத்தினை தொடர்ந்து விஜய் அடுத்ததாக நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார்.

படத்தின் படப்பிடிப்புகள் தேர்தல் முடிந்தவுடன் தொடங்க உள்ளது. அதாவது முதல் பாடல் ஷூட்டிங் தொடங்கி ஒரு வாரம் பூந்தமல்லி அருகே உள்ள கோகுலம் ஸ்டுடியோஸில் தொடங்கும் என டான்ஸ் மாஸ்டர் ஜானி தெரிவித்து இருந்தார்.

மேலும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் ஆகியவை விஜயின் பிறந்த நாளான ஜூன் 21 மற்றும் அதற்கு முன்னதாக இயக்குனர் நெல்சன் பிறந்த நாளும் வருவதால் அதன் விருந்தாக வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் இந்த படத்திற்கு வெறித்தனம், இளைய தளபதி, டார்கெட் ராஜா, ராக்ஸ்டார் போன்ற பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.