Thalapathy 65 Movie Title Update

தளபதி 65 படத்தின் டைட்டில் என்ன என்பது குறித்தும் இப்படத்தின் நாயகி யார் என்பது குறித்த தகவல் ஒன்றும் கசிந்துள்ளது.

Thalapathy 65 Movie Title Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக மாஸ்டர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. மேலும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தளபதி 65 என்ற திரைப்படம் உருவாக உள்ளது.

தளபதி 65 படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் நேற்று வெளியிட்டது. அதாவது இந்தத் திரைப்படத்தை நெல்சன் திலிப்குமார் இயக்க அனிருத் இசையமைக்கவுள்ளார் என அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பு விஜய் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில் அடுத்ததாக இந்த படத்தின் டைட்டில் என்ன? நாயகி யார்? என்பது குறித்த தகவல் கிடைத்துள்ளது.

அதாவது தளபதி 65 படத்தில் நாயகியாக நடிக்க ராஷ்மிகா மந்தனா வுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளது என கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த படத்திற்கு டார்கெட் ராஜா என டைட்டில் வைக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

தளபதி 65 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் டிசம்பர் 31-ஆம் தேதி வெளியாகும் எனவும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன.