Thalapathy 65 Movie Pooja

தளபதி 65 படத்தின் பூஜை கோலாகலமாக நடைபெற்றுள்ளது.

Thalapathy 65 Movie Pooja : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக தளபதி 65 திரைப்படம் வெளியாக உள்ளது.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள இந்த படத்தினை நெல்சன் திலீப்குமார் இயக்க அனிருத் இசையமைக்க உள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் வெகு விரைவில் தொடங்கும் என கூறப்பட்டு வந்த நிலையில் இன்று இப்படத்தின் பூஜை கோலாகலமாக நடைபெற்றுள்ளது.

படத்தின் பூஜையில் விஜய், பூஜா ஹெக்டே, இயக்குனர் நெல்சன் திலீப் குமார் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டுள்ளனர்.