Thalapathy 65 Movie Director Update

தளபதி 65 படத்தின் இயக்குனர் யார் என்பது தற்போது உறுதியாகியுள்ளது.

Thalapathy 65 Movie Director Update : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக மாஸ்டர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய் யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே இருந்து வந்தது.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் முருகதாஸ் இப்படத்தில் இருந்து விலக்கப்பட்டதாகவும் அதன்பின் தகவல் வெளியானது.

இதனையடுத்து இப்படத்தை சுதா கொங்கரா, வெற்றிமாறன், மகிழ்திருமேனி, பேரரசு ஆகியோர்களில் ஒருவர் இயக்கலாம் என பேசப்பட்டு வந்தது.

அதே சமயம் கோலமாவு கோகிலா படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் பெயரும் முன்னணியில் இடம் பெற்றிருந்தார்.

இந்த நிலையில் தற்போது விஜய்யின் அடுத்த படமான தளபதி 65 படத்தை இயக்குவது நெல்சன் திலீப்குமார் என்பது உறுதியாகி உள்ளது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் டிசம்பர் 31-ஆம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது. மேலும் இப்படத்திற்கு இதற்கு முன்னதாக தமன் இசையமைக்க இருப்பதாக தகவல் வெளியானது. அதனை அவரும் உறுதி செய்திருந்தார்.

தற்போது இயக்குனர் மாற்றப்பட்டு இருப்பதால் அனிருத் இசை அமைக்கலாம் எனவும் அல்லது தமனே இசை அமைக்கலாம் எனவும் பேசப்பட்டு வருகிறது.

முதல் முறையாக விஜய் மற்றும் நெல்சன் கூட்டணி அமைவதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் தற்போதே உச்சத்தை தொட ஆரம்பித்துள்ளது.