Vijay 65

தளபதி 65 சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து புகைப்படம் ஒன்று இணையத்தில் லீக் ஆகி உள்ளது.

Thalapathy 65 Leaked Photo From Shooting Spot : தமிழ் சினிமாவில் நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் வெளியானதை தொடர்ந்து அடுத்ததாக தளபதி 65 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தினை கோலமாவு கோகிலா படத்தினை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்க அனிருத் இசையமைத்து வருகிறார். படத்தின் படப்பிடிப்புகள் ஜார்ஜியாவில் நடைபெற்று வருகின்றன.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். ஏற்கனவே படத்தின் ஷீட்டிங் தொடங்கி விட்டதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருந்தது. இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு புகைப்படம் இணையத்தில் லீக்காகி உள்ளது.

செம கெத்தான லுக்கில் தளபதி விஜய் இருக்கும் அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.