Thalapathy 65 Heroine Details

தளபதி 65 படத்தில் விஜய்க்கு ஜோடியாகப்போவது யார் என்பது குறித்து தெரிய வந்துள்ளது.

Thalapathy 65 Heroine Details : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக மாஸ்டர் என்ற திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி அர்ஜுன் தாஸ் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் சாந்தனு, சேத்தன், ஸ்ரீமன், சஞ்சீவ் ஸ்ரீநாத், பிரேம் என பல நடிகர் நடிகைகள் இணைந்து நடித்துள்ளனர்.

இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இப்படியான நிலையில் அடுத்த படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் நடிக்கலாம் என கூறப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் விஜய்க்கு வில்லனாக பாலிவுட் நடிகர் ஜான் ஆப்ரஹானிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.