Thalapathy 65 Heroine Details

தளபதி 65 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிப்பதற்காக ராஷ்மிகா மந்தனா செய்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Thalapathy 65 Heroine Details : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தளபதி 65.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து கோலமாவு கோகிலா டாக்டர் உள்ளிட்ட படங்களை இயக்கிய நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் நடித்து வருகிறார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளார் என கூறப்பட்டு வந்தது.

அதன் பின்னர் அவர் இப்படத்தில் இணையவில்லை. ராஷ்மிகா மந்தனா தான் நாயகியாக நடிக்கப் போகிறார் என கூறப்பட்டு வந்தது.

இந்த நிலையில் தளபதி 65 படத்தில் நடிப்பதற்காக ராஷ்மிகா மந்தனா தெலுங்கு பட வாய்ப்பு ஒன்றை நிராகரித்து விட்டதாக கூறப்படுகிறது.

இந்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.