Thalapathy 65 Heroine Details

தளபதி 65 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கப் போவது யார் என்பது குறித்த புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

Thalapathy 65 Heroine Details : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படம் நல்ல வெற்றியைப் பெற்றுள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் கோலமாவு கோகிலா பட இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாக உள்ள திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்புகள் பிப்ரவரி மாதத்திலிரந்து தொடங்கும் என கூறப்பட்டு வருகிறது. மேலும் இந்த படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிப்பதாக கூறப்பட்டு வந்தது.

ஆனால் தற்போது கிடைத்துள்ள தகவலின்படி இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா தான் நடிக்க உள்ளார். இதற்காக அவரிடம் இறுதிகட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் கசிந்துள்ளது.

இந்த படத்தின் நாயகி யார் என்பது குறித்த அதிகாரப்பூர்வ ‌தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.