Thalapathy 65 Heroine Details

தளபதி 65 பட வாய்ப்புக்காக இரண்டு நடிகைகள் கழுகுகள் போல காத்து இருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

Thalapathy 65 Heroine Details : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக மாஸ்டர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார்.

மாஸ்டர் படத்தை தொடர்ந்து அவருக்கு அடுத்ததாக கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ்க்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. விஜயுடன் இணைந்து நடித்ததால் மாளவிகாவுக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.

இதனால் தளபதி 65 படத்தில் விஜய்க்கு ஜோடியாகி எப்படியாவது தமிழ் சினிமாவின் நம்பர் 1 நடிகையாகி விட வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு வாய்ப்பைத் தேடி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவர்கள் வேறு யாரும் இல்லை, தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் பூஜா ஹெக்டே மற்றும் ராஷ்மிகா மந்தனா தான் என கூறப்படுகிறது.

தளபதி விஜய்க்கு எப்படி விஜய்க்கு ஜோடியாகி தமிழ் சினிமாவில் நயன்தாராவை ஓரங்கட்டி முன்னணி நடிகையாக வலம் வர வேண்டும் என்ற ஆசையில் விஜய் பட வாய்ப்பை தட்டிப் பறிக்க முயற்சி செய்து வருவதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

தளபதி 65 படத்தை யார் இயக்கப் போகிறார்கள் யார் தயாரிக்கப் போகிறார்கள் என்பது குறித்த எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில் இவர்கள் இந்தப் படத்திற்காக போட்டி போட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.