Thalapathy 65 DOP Update

9 ஆண்டுகளுக்கு பிறகு தளபதி 65 படத்தில் மீண்டும் பிரபலம் ஒருவர் விஜயுடன் இணைய உள்ளார்.

Thalapathy 65 DOP Update : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக தளபதி 65 படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர் உள்ளிட்ட படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்க அனிருத் இசையமைத்து வருகிறார்.

இந்த படத்தில் நடிக்க போவது யார் யார் என்பது குறித்த தகவல்கள் அடுத்த மாதம் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தற்போது தளபதி 65 படத்தில் ஒளிப்பதிவாளராக நண்பன் படத்தில் விஜய்யுடன் இணைந்து பணியாற்றிய மனோஜ் பரமஹம்சா இணைய இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.