Thalapathy 65

தளபதி 65 படத்தின் இயக்குனர் யார் என்பது குறித்த தகவல்கள் நேற்று இணையத்தில் வைரலாகி இருந்தன.

தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகி தீபாவளி விருந்தாக வெளியாகி உள்ள பிகில் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

ரசிகர்கள் அனைவருமே படத்தை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் நேற்று தளபதி 65 படத்தை முருகதாஸ் அல்லது பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கலாம் என வாய்ப்பு இருப்பதாக AGS சினிமாஸ் என்ற பெயரில் ட்வீட் ஒன்றும் XB பிலிம்ஸ் என்ற நிறுவனத்தின் பெயரில் ட்வீட் ஒன்றும் பதிவானது.

ஆனால் இந்த இரண்டு ட்விட்டர் கணக்கும் போலியானவை என்பதால் இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. ஒருவேளை இந்த கூட்டணி மட்டும் இணைந்தால் நிச்சயம் அது வெறித்தனமான கூட்டணியாக இருக்கும்.

மேலும் ரசிகர்கள் பலரும் தளபதி 65 படத்தை வெற்றிமாறன் இயக்க வேண்டும், மோகன் ராஜா இயக்க வேண்டும் என அவர்களது கருத்துகளையும் வெளிப்படுத்தி வருகின்றனர். உண்மையில் தளபதி 65 படத்தை யார் இயக்க போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.