Thalapathy 65 Comedy Actor Update

தளபதி 65 இணையும் காமெடி நடிகர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

Thalapathy 65 Comedy Actor Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய் இவரது நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ், விஜய் சேதுபதி போன்ற திரையுலக பிரபலங்கள் இணைந்து நடித்து வெளியான இந்தப் படம் பொங்கலன்று திரையரங்குகளில் வெளியானது.

தற்போது தளபதி விஜயின் அடுத்த படமான தளபதி 65 நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியாக உள்ளது. இந்தப்படத்தில் ஹீரோயினியாக ராஷ்மிகா மந்தனா இடம் பெறுவார் என்ற தகவலும் வெளியானது.

தளபதி விஜய் உடன் ராஷ்மிகா மந்தனா முதன்முறையாக இணைந்து படம் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து காமெடி நடிகர் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

தளபதி 65 இல் காமெடி நடிகராக விடிவி கணேஷ் இணைய உள்ளதாக தகவல் வெளியானது.

இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.