Thalapathy 65 Clash With Ponniyin Selvan

தளபதி 65 படத்துக்கு போட்டியாக மிக பிரம்மாண்ட திரைப்படம் ஒன்று வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Thalapathy 65 Clash With Ponniyin Selvan : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக தளபதி 65 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தைத் தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் இந்தப் படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்புகள் ஜார்ஜியாவில் நடைபெற்று வருகின்றன.

இப்படத்தின் படப்பிடிப்புகளை விறுவிறுப்பாக நடத்தி முடித்து வரும் 2022 பொங்கலுக்கு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது‌. வழக்கம் போல இந்த முறையும் படத்தினை சோலோவாக ரிலீஸ் செய்து வசூலை வாரிக் கொள்ளலாம் சன் பிக்சர்ஸ் நிறுவனம் திட்டமிட்டு இருந்தது. அதற்கு செக் வைக்கும் வகையில் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

அதாவது மணிரத்தினம் மிகப் பிரமாண்ட பட்ஜெட்டில் பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்புகள் 70% முடிவடைந்துள்ள நிலையில் இதனையும் 2022 பொங்கலுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

இதனால் தளபதி 65 மற்றும் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் ஆகியவை ஒரே நாளில் மோதிக் கொள்ளும் சூழல் உருவாகி உள்ளது. இந்த இரண்டு படங்களில் எது திட்டமிட்டபடி வெளியாகும் எது தள்ளிப்பகும் என்பதையும் பொறுத்திருந்து பார்க்கலாம்.