thalapathy64
நடிகர் விஜய் நடிக்கவுள்ள புதிய திரைப்படம் பற்றி பல தகவல்கள் வெளியே கசிந்துள்ளது.

Thalapathy 64 updates of all actors – பிகில் திரைப்படத்திற்கு பின் மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் பூஜை இன்று எளிமையான முறையில் நடைபெற்றது. இப்படம் பற்றிய முக்கிய தகவல்களை பார்க்கலாம்.

இப்படத்தில் கல்லூரி பேராசிரியர் வேடத்தில் விஜய் நடிக்கிறார். கசங்கிய சட்டையும், கலைந்த முடியுமாக அவர் வலம் வருவாராம். பாதிக்கு மேல் அவர் வேறு அவதாரம் எடுப்பதுபோல் கதை அமைக்கப்பட்டுள்ளது.

vijay 64

இப்படத்தின் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். அதற்கு அவருக்கு ரூ.15 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளது.

இயக்குனர் பாக்கியராஜின் மகனும், நடிகருமான சாந்தனு இப்படத்தில் கல்லூரி மாணவன் வேடத்தில் நடிக்கிறார்.

பேட்டை படத்தில் நடித்த மாளவிகா மேனன் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

மலையாள நடிகர் அந்தோனி வர்கீஸும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்தை சேவியர் பிரிட்டோவின் எக்ஸ்.பி.ஃபிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.

இப்படத்தை 2020ம் ஆண்டு கோடை விடுமுறையில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.