Vijay 64 First Look
தளபதி 64 படத்தின் பர்ஸ்ட் லுக் எப்போது என்பது குறித்த தகவல் ஒன்று இணையத்தில் கசிந்து வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விஜய் 64. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தை விஜய் உறவினரான பிரிட்டோ தயாரிக்கிறார்.

விஜய் சேதுபதி, ஆண்டனி வர்கீஸ், சாந்தனு, மாளவிகா மோகனன் மற்றும் பலர் இணைந்து நடித்து வரும் இப்படம் சம்மர் 2020-ல் வெளியாகும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் நியூ இயர் 2020 அன்று வெளியாகும் என கூறப்படுகிறது. ஆனால் படக்குழு தரப்பில் இருந்து இதுவரை இது குறித்த தகவல் வெளியாகவில்லை.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.