Thalapathy 63 Villian

Thalapathy 63 Villian : தளபதி 63 படத்தில் இரண்டு நாயகி என்பதும் வில்லனாக நடிக்க இருப்பது யார் என்ற தகவலும் கிடைத்துள்ளன.

முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்திருந்த சர்கார் படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் அட்லீ இயக்கத்தில் மூன்றாவது முறையாக இணைந்து நடிக்க உள்ளார்.

இந்நிலையில் தற்போது இப்படத்தை பற்றிய அடுத்த தகவல்கள் வெளியாகி கொண்டே இருக்கின்றன. நேற்று ஒரு சில தகவல்களை நமது தளத்திலேயே கூட பதிவிட்டு இருந்தோம்.

அதாவது தளபதி 63 படத்தில் விஜய் சி.பி.ஐ அதிகாரியாக நடிக்க உள்ளாராம். ராட்சசன், இமைக்கா நொடிகள் படத்தை போல திரில்லர் பாணியில் படம் உருவாக உள்ளது.

இந்த படத்தில் நாயகிகளாக த்ரிஷா மற்றும் கீர்த்தி சுரேஷையும் நடிக்க வைக்க பேச்சு வார்த்தைகள் நடந்து வருகிறதாம்.

மேலும் வில்லனாக இமைக்கா நொடிகள் படத்தில் நடித்திருந்த அனுராக் காஷ்யப் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்த படத்திற்கும் ஏ.ஆர்.ரஹ்மானே இசையமைக்க உள்ளராம். AGS நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.