Thalapathy 63 Updates :
Thalapathy 63 Updates :

Thalapathy 63 Updates : அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்துவரும் தளபதி 63 படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னை சுற்றுப்புற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகிவரும் இப்படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, விவேக், ஜாக்கி ஷெராப், கதிர், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறது.

குடும்பத்துடன் சீனாவில் உலாவரும் விஜய் – வைரலாகும் புகைப்படம் உள்ளே!

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய் பிறந்தநாளில் வெளியாகும் என்றுதான் எல்லோரும் நினைத்து வருகிறோம்.

ஆனால் ஏ.ஜி.எஸ் நிறுவனம் முன்னதாகவே அதாவது ஏப்ரல் 14-ல் தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாகவே ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட திட்டமிட்டுள்ளனராம்.

விஜய் மனசு யாருக்கு வரும்? தளபதி 63 குறித்து வெளியான அதிரடி தகவல்.!

இதற்கான பேச்சுவார்த்தையும் தற்போது தொடங்கியுள்ளதாம்.  இதற்கு முன்பு மெர்சல், சர்கார் படங்களின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய் பிறந்தநாளில் வெளியாகியிருந்த நிலையில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக இந்த போஸ்டரை ஏப்ரலிலேயே வெளியிடுகிறார்களாம்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.