Thalapathy 63 Story

Thalapathy 63 Story : தளபதி விஜய் அட்லீ இயக்கத்தில் நடிக்க உள்ள தளபதி 63 படத்தின் கதை குறித்த தகவல் இணையத்தில் லீக்காகியுள்ளது.

தளபதி விஜய் முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகி இருந்த சர்கார் படத்தை அடுத்து மீண்டும் மூன்றாவது முறையாக அட்லீ இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்தின் கதையும் அரசியல் பேசும் படமாக தான் இருக்கும், அப்படி இருந்தால் படத்திற்கு ஆளப்போறான் தமிழன் என்று டைட்டில் வைக்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வைரலாகி இருந்தன.

இந்நிலையில் தற்போது புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அது என்னவென்றால் இந்த படம் இமைக்கா நொடிகள், ராட்சசன் ஆகிய படங்களை போல விறுவிறுப்பான திரில்லர் கதையாக உருவாக உள்ளதாம்.

மேலும் இந்த படத்தில் தளபதி விஜய் சி.பி. ஐ அதிகாரியாக நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

அப்புறம் என்ன தளபதி 63 வேற லெவல் தான் என ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.