Thalapathy 63 Release Date

Thalapathy 63 Release Date : தளபதி விஜய் அட்லீ இணைய உள்ள படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் சூசமாக அறிவித்துள்ளனர்.

தளபதி விஜய் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள சர்க்கார் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

தெறி, மெர்சல் என இரண்டு பிளாக் பஸ்டர் படங்களை கொடுத்த அட்லீ விஜயின் மெகா கூட்டணி தற்போது மீண்டும் மூன்றாவது முறையாக இணைந்துள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஜனவரி 2019-ல் தொடங்க உள்ளது. அதற்காக லொகேஷன் தேர்ந்தெடுக்கும் வேளைகளில் தற்போது அட்லீ பிஸியாக உள்ளார்.

AGS நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த படத்தின் ரிலீஸ் குறித்த தகவலை தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியின் மகள் ஐஸ்வர்யா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடுத்த வருட தீபாவளிக்கு தளபதி 63 வெளியாகும் என்பது போலா சூசகமாக அறிவித்துள்ளார்.

அப்புறம் என்ன அடுத்த வருட தீபாவளியும் தளபதி தீபாவளி தான். கொண்டாட நீங்க தயாரா ரசிகர்களே?

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.