Vijay 63

Vijay 63 : தளபதி 63 படம் எப்படி இருக்கும்? எந்த மாதிரியான கதையம்சம் கொண்ட படம் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

தமிழ் சினிமாவின் தளபதியான விஜய் முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகி இருந்த சர்கார் படத்தை அடுத்து தெறி, மெர்சல் என இரண்டு ஹாட்ரிக் ஹிட் கொடுக்க அட்லீ இயக்கத்தில் மீண்டும் நடிக்க உள்ளார்.

AGS நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த படத்தின் அப்டேட்கள் நேற்று வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்திருந்தன.

இந்த அறிவிப்பை தொடர்ந்து படத்தை பற்றிய அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகி கொண்டே இருக்கின்றன. இந்நிலையில் தற்போது படத்தின் கதையம்சம் குறித்த தகவல் கிடைத்துள்ளது.

அது என்னவென்றால் இப்படம் விளையாட்டை மையமான கொண்ட பக்கா பேமிலி என்டர்டைனர் படமாக உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.

குறிப்பாக தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி இருந்த கிள்ளி படத்தை போல மெர்சல் காட்டும் படமாக இருக்கும் எனவும் கோலிவுட் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் படத்தின் படப்பிடிப்புகள் ஜனவரியில் தொடங்கும் எனவும் தீபாவளிக்கு வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.