Thalapathy63

Thalapathy63 : தளபதி விஜய் அட்லீ இயக்கத்தில் நடிக்க உள்ள தளபதி 63 படத்தை பற்றிய சில முக்கிய தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளன.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள சர்கார் படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தை அடுத்து தெறி, மெர்சல் என இரண்டு படங்களை இயக்கிய அட்லீ இயக்கத்தில் மூன்றாவது முறையாக நடிக்க உள்ளார்.

AGS நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஜனவரி மாதத்தில் தொடங்க உள்ளன. அதற்கான முதற்கட்ட பணிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் தற்போது இப்படத்தை பற்றிய மேலும் சில தகவல்கள் கிடைத்துள்ளன. அது என்னவென்றால் தளபதி 63 படத்திற்கு ஜி.கே. விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் எடிட்டிங் பணிகளை ஏ.எல் ரூபன் கவனிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இவர்கள் இருவருமே மெர்சல் படத்தில் பனி புரிந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.