Thalapathy 63 Location

Thalapathy 63 Location : தளபதி 63 படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டை இயக்குனர் அட்லீ தன்னுடைய டீமுடன் சேர்ந்து தேடி பிடித்துள்ளார். அந்த புகைப்படமும் இணையத்தில் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் அட்லீ, இயக்கி இருப்பது மூன்று படம் என்றாலும் அவை அனைத்தும் மெகா ஹிட் படங்கள் தான் என்பது அனைவர்க்கும் தெரிந்த ஒன்று.

இவர் தற்போது தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக விஜயுடன் இணைந்துள்ளார். இவரது இயக்கத்தில் உருவாக உள்ள தளபதி 63 படத்தை AGS நிறுவனம் தயாரிக்க உள்ளது.

இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியானதை அடுத்து அட்லீ படத்திற்காக லொகேஷனை தேடும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

தற்போது சென்னையில் SSN கல்லூரியை தேர்வு செய்துள்ளது தெரிய வந்துள்ளது. மேலும் அட்லீ தன்னுடைய டீமுடன் சேர்ந்து அந்த கல்லுரி வளாகத்தில் எடுத்து கொண்ட புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஸ்போர்ட்ஸை மையமாக கொண்டு உருவாக இருப்பதாக கூறப்படும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஜனவரி மாதத்தில் தொடங்கும் எனவும் கூடுதல் தகவல்கள் கிடைத்துள்ளன.

Thalapathy 63 Location

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.