Thalapathi 65 Shooting Update

தளபதி 65 திரைப்படம் ஷூட்டிங் தொடங்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Thalapathi 65 Shooting Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் வெளியாகி உள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர்.

இந்தத் திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூல் வேட்டையும் தந்து வருகிறது.

இதனைத் தொடர்ந்து தளபதி 65 திரைப்படத்திற்கான ஷூட்டிங் ஏப்ரல் மாதம் தொடங்கப் போவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

ஆனால் இன்னும் படத்தில் யார் யார் நடிக்கப் போகிறார்கள் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

இது தளபதி ரசிகர்கள் இடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.