Thalaivi Movie Release Postponed Announcement

கொரோனா வைரஸ் மீண்டும் தீவிரமாக பரவி தொடங்கியதால் தலைவி படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Thalaivi Movie Release Postponed Announcement : சீனாவில் இருந்து கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் பரவ தொடங்கியது கரோனா வைரஸ். இந்த வைரஸ் தொற்று தற்போது மீண்டும் தீவிரமாக பரவத் தொடங்கியுள்ளது.

மகாராஷ்டிரா, கேரளா, ஆந்திரா, தமிழ்நாடு உள்ளிட்ட பகுதிகளில் இந்த வைரஸ் மீண்டும் அதி வேகமாக பரவி வருகிறது. இதனால் ஊரடங்கு உத்தரவுகளில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

ஏற்கனவே மகாராஷ்டிராவில் இரவு ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் ஊரடங்கில் பல கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஏ எல் விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத் நடிப்பில் உருவாகியுள்ள தலைவி படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 23ல் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருந்த நிலையில் தற்போது படத்தில் அந்த முடிவை கைவிட்டு உள்ளதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.