thalaivi
தலைவி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்து கடுப்பாகியுள்ளார் பிரபலம் ஒருவர்.

தமிழ் சினிமாவில் நடிகையாகவும் தமிழகத்தின் முதல்வராகவும் விளங்கியவர் புரட்சி தலைவி செல்வி ஜெ ஜெயலலிதா. இவரது மறைவிற்கு பிறகு அவரது வாழ்க்கை வரலாற்றை படமாக்க பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கவுதம் மேனன் வெப் சீரிஸ் இயக்குகிறார். ஏ.எல் விஜய் தலைவி என்ற பெயரில் படத்தை இயக்குகிறார். இதில் கங்கனா ரனாவத் ஜெயலலிதாவாக நடிக்கிறார்.

படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகி பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பர்ஸ்ட் லுக் பார்ப்பதற்கு ஜெயலலிதாவை போலவும் இல்லை கங்கனா ரனாவத் போலவும் இல்லை என நெட்டிசன்கள் நொந்து கொள்கின்றனர்.

மேலும் விமர்சகர் ஒருவர் ஜெயலலிதாவின் ஆன்மா கூட உங்களை சும்மா விடாது என கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் நெட்டிசன்கள் இதை தான் இவ்வளவு நாளா ஒட்டிக்கிட்டு இருந்தீங்களா எனவும் கலாய்க்கின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.