Thalaivar 168
Thalaivar 168

Thalaivar 168 : பேட்ட படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படதை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார்.

தர்பார் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று மும்பையில் துவங்கியுள்ளது.

இதற்குள்ளாகவே ரஜினி நடிக்கும் அடுத்த படம் பற்றிய தகவல் கிடைத்துள்ளது. முன்னதாக ரஜினியின் அடுத்த படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்குவர் என்றுதான் சொல்லப்பட்டது.

ஆனால் உண்மையில் ரஜினியின் அடுத்த படத்தை நேர்கொண்ட பார்வை இயக்குனர் வினோத் தான் இயக்குகிறாராம்.

h.vinoth
h.vinoth

தற்சமயம் நேர்கொண்ட பார்வை படத்தின் பின் தயாரிப்பு பணிகளில் இருக்கும் வினோத். இந்த படம் முடிந்ததும் மீண்டும் அஜித் நடிப்பில் ஒரு படத்தை இயக்குகிறார்.

அந்த படம் முடிந்த பிற்பாடே ரஜினி படத்தை வினோத் இயக்குகிறாராம்.

அஜித் படம் ஏப்ரல் 10-ம் தேதியும் தர்பார் பொங்கலுக்கும் வெளியாகவிருப்பதால் இருவரும் தங்களுடைய தற்போதைய படங்களை முடித்து இணைய சரியாக இருக்குமாம்.

மேலும் வினோத் படத்தை முடித்த கையோடு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் படத்திலும் ரஜினி நடிக்கவுள்ளாராம். இப்படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கிறார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.