தலைவர் 168 படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மீனா நடிக்க இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முருகதாஸ் இயக்கத்தில் உருவாக உள்ள தர்பார் படத்தை தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் தலைவர் 168 படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க டி.இம்மான் இசையமைக்க உள்ள இந்த படத்தில் சூரி, பிரகாஷ் ராஜ், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.
இவர்களை தொடர்ந்து தற்போது நடிகை மீனா இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நடிகை மீனா தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு ஜோடி எனவும் கீர்த்தி சுரேஷ் மகள் வேடத்தில் நடிக்கலாம் எனவும் தகவல்கள் கூறுகின்றன.
The enduring beauty #Meena joins the cast of #Thalaivar168@rajinikanth @directorsiva pic.twitter.com/vq7RBpkZo9
— Sun Pictures (@sunpictures) December 10, 2019