தல 61 மற்றும் 62 படத்தின் இயக்குனர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Thala62 Movie Director : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் வலிமை கொண்ட திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை தொடங்கி தல அஜித் யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என்பதே ரசிகர்கள் மனதில் நிற்கும் மில்லியன் டாலர் கேள்வி.

ஏற்கனவே தல 61 படத்தை மீண்டும் எச் வினோத் தான் இயக்கப் போகிறார். ஆனால் தயாரிப்பு நிறுவனம்தான் வேறு என தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் தற்போது தல 62 குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

வெகுநாட்களாக தனக்காக கதை ஒன்றைக் கூறி காத்துக்கொண்டிருக்கும் இயக்குனருக்கு தான் அஜித் வாய்ப்பு கொடுக்க உள்ளார். அவர் வேறு யாரும் இல்லை பிரபல இயக்குனரான சுதா கொங்கரா. இறுதிச்சுற்று இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர் அடுத்ததாக சூர்யாவை வைத்து சூரரைப்போற்று என்ற ஹிட் படத்தைக் கொடுத்தார்.

இந்தப் படங்களைத் தொடர்ந்து தங்கம் என்ற வெப் சீரிஸ் தொடரை இயக்கி இருந்தார். இந்த நிலையில் தல அஜித் இவருடன் இணைந்து பணியாற்றத் ஓகே சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் தல 62 படத்தை இயக்கப்போவது சுதா கொங்கரா தான் தகவல்கள் கசிந்துள்ளன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.