Thala61 Clarification From Ajith

தல 61 படம் குறித்து வெளியான தகவல் உண்மையில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் தல அஜித்.

Thala61 Clarification From Ajith: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் வலிமை என்ற திரைப்படம் அடுத்ததாக வெளியாக உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு 90 சதவீதம் முடிவடைந்து விட்ட நிலையில் சில சண்டைக் காட்சிகள் மட்டுமே வெளிநாடுகளில் படமாக்கப்பட உள்ளது.

கொரானாவின் இரண்டாவது அலை பரவல் காரணமாக இந்த காட்சிகள் படமாக்கவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது ஒருபுறமிருக்க தல 61 படத்தை வினோத் தன் இயக்கவுள்ளார். ஜூலை மாதம் முதல் ஷூட்டிங் நடைபெறும் என தகவல் பரவியது.

ஆனால் தற்போது இது குறித்து அஜித் தரப்பில் விளக்கம் அளித்துள்ளது. அதாவது தற்போதைக்கு வலிமை படத்தில் மட்டும் தான் அஜித் கவனம் செலுத்தி வருகிறார். வலிமை முடிந்த பிறகு தான் அடுத்த படம் பற்றிய யோசனை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.