தல அஜித்தின் 50வது பிறந்த நாளுக்கான காமன் டிபி புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Thala50 Common DP : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தினை எச் வினோத் இயக்க போனி கபூர் தயாரித்து வருகிறார்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அஜீத்தின் பிறந்த நாளான மே ஒன்றாம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. ஆனால் தற்போது கொரானா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை தீவிரம் எடுத்திருப்பதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் வலிமையை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் தள்ளிப் போவதாக படக்குழு அறிவித்துள்ளது.

இது அஜித் ரசிகர்களுக்கு அப்செட்டை ஏற்படுத்தியிருந்த நிலையில் தற்போது ‌ தல அஜித்தின் 50வது பிறந்த நாளுக்கான காமன் டிபி புகைப்படம் ஒன்றை ரசிகர்கள் வெளியிட்டுள்ளனர். இந்தப் புகைப்படம் இணையத்தில் செம வைரலாகி வருகிறது.