Thala Reference in Master Song
Thala Reference in Master Song

மாஸ்டர் பட பாட்டில் தல அஜித் பற்றிய விஷயம் இடம் பெற்றிருப்பதை அஜித் ரசிகர்கள் கண்டு பிடித்துள்ளனர்.

Thala Reference in Master Song : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார்.

வெகு விரைவில் திரைக்கு வரவுள்ள இந்த படத்தில் இருந்து நேற்று பொலகட்டும் பரபர என்ற லிரிக்ஸ் வீடியோ வெளியாகியிருந்தது.

தியேட்டரையே அதிர விட போகும் மாஸ்டர் காட்சி.. வெளியான செம மாஸ் தகவல்.!

இதில் விஜய்சேதுபதியை சுற்றியிருக்கும் நபர்களில் ஒருவர் அஜித் ரசிகர். அவர் கையில் தல அஜித் என்ற பெயரில் உள்ள பேண்ட்டை அணிந்து உள்ளார்.

இதனை கண்டு பிடித்த அஜீத் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இந்த புகைப்படங்களை பதிவிட்டு பரபரப்பை கிளப்பி உள்ளனர்.

இதனால் அஜித் விஜய் ரசிகர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

https://twitter.com/KokkiOfficial/status/1245315232198791168