Thala Fans Celebration on Cine Function
Thala Fans Celebration on Cine Function

தல என்ற ஒரே வார்த்தையால் அரங்கத்தில் எழுந்த அதிர்வு பிரபலங்கள் பலரையும் மிரள வைத்துள்ளது.

Thala Fans Celebration on Cine Function : தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித்.

எந்தவித சினிமா பின்புலமும் இல்லாமல் தன்னுடைய விடாமுயற்சியாலும் தன்னம்பிக்கையாலும் இன்று உச்சம் நடிகராக இடம்பிடித்துள்ளார்.

கொரானா நிவாரண நிதியாக சன் நெட்வொர்க் கொடுத்த தொகை, குவியும் பாராட்டு – இதோ அதிகாரப்பூர்வ தகவல்.!

தமிழ் சினிமாவின் ஹீரோக்களாக இருக்கும் நடிகர்களிலேயே அதிகமான தோல்வியை கொண்ட நடிகராக இருந்தாலும் அவருடைய தன்னம்பிக்கை தான் ரசிகர்களின் கூட்டத்திற்கு காரணம்.

இதனால் ரசிகர்கள் பலரும் தல என்ற வார்த்தையை தன்னம்பிக்கையின் தாரக மந்திரமாகவே பார்க்கின்றனர்.

திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் விவேக் பேசும் போது தல என்ற வார்த்தை உச்சரித்ததும் அரங்கமே அதிர்ந்தது.

அம்மாவாக நடிப்பில் மிரட்டும் கீர்த்தி சுரேஷ்.. தனுஷ் வெளியிட்ட பெண் குயின் ட்ரைலர்!

ரஜினி,சூர்யா, தனுஷ், விஷால் என அரங்கத்தில் இருந்த அத்தனை நடிகர்களும் அரங்கத்தில் எழுந்த அதிர்வை ஆச்சரியத்துடன் பார்த்துள்ளனர்.

இந்த வீடியோவை அஜித் ரசிகர்கள் ஷேர் செய்ய செய்ய தற்போது மீண்டும் சமூக வலைதளங்களில் வைரலாக தொடங்கியுள்ளது.