மொட்டை தலையுடன் துப்பாக்கி சுடுதல் பயிற்சியில் தல அஜித் ஈடுபட்டுவரும் புகைப்படங்கள் இணையத்தில் டிரெண்டடித்து வருகின்றனர்.

Thala Ajith’s Gun Shoot Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் உருவாகி வரும் இந்த திரைப்படத்திற்காக ஒட்டுமொத்த அஜித் ரசிகர்களும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இருப்பினும் வலிமை படக்குழுவினர் படத்தைப் பற்றிய எந்தவித அறிவிப்பையும் வெளியிடாமல் தொடர்ந்து அமைதி காத்து வருகின்றனர்.

ஆனால் அவ்வபோது சில புகைப்படங்கள் இணையத்தில் செம வைரலாகி வருகின்றன. கடந்த சில தினங்களாக தொடர்ந்து தல அஜித் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

அந்த வகையில் தற்போது தல அஜித் மொட்டை தலையுடன் துப்பாக்கி சுடுதல் பயிற்சியில் ஈடுபடும் புகைப்படங்கள் டிரெண்டாக தொடங்கியுள்ளன.

இந்த புகைப்படங்களை அஜித் ரசிகர்கள் சமூக வலைதளப் பக்கங்களில் ஷேர் செய்து கொண்டாடி வருகின்றனர்.